டெல்லியில் கொடூரம்; பெண்ணை பலாத்காரம் செய்து, எரித்து, சாக்கடையில் வீசிய சிறுவன்

டெல்லியில் பெண்ணை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து, சாக்கடையில் வீசி சென்ற கொடூரம் நடந்துள்ளது.
டெல்லியில் கொடூரம்; பெண்ணை பலாத்காரம் செய்து, எரித்து, சாக்கடையில் வீசிய சிறுவன்
Published on

புதுடெல்லி,

டெல்லியின் துவாரகா பகுதியில் குப்பை தொட்டி அருகே சாக்கடை ஒன்றில் பெண் ஒருவரது சடலம் துணியால் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. 32 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் புகைப்படம் பல்வேறு வாட்ஸ்அப் குரூப்புகளில் பகிரப்பட்டது. பெண்ணின் குடும்பத்தினருக்கும் புகைப்படம் பற்றிய தகவல் சென்றடைந்தது.

2,700 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. சி.சி.டி.வி. கேமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் கடந்த 17ந்தேதி 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அந்த சிறுவன், தனது வீட்டில் வைத்து அந்த பெண்ணின் கைகளை கட்டி போட்டு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்பின்பு போலீசில் சிக்கி விட கூடாது என்பதற்காக பெண்ணை கொன்றுள்ளான். பின் பெண்ணின் பிறப்புறுப்புகளை எரித்து சான்றுகளை அழித்துள்ளான்.

அதன்பின்னர் உடலை சாக்கடையில் வீசி சென்றது தெரிய வந்துள்ளது. சிறுவனிடம் இருந்து ஒரு மாருதி வேன், இரும்பு குழாய் ஒன்று, மண்ணெண்ணெய், டேப், எரிந்த துணிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com