தலைநகர் டெல்லியில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தலைநகர் டெல்லியில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 1 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com