வயிற்று வலிக்கு வந்த பெண்ணை டயாலிசிஸ் அறுவை சிகிச்சை செய்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள்

டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் வயிற்று வலிக்கு வந்த பெண்ணை தவறுதலாக டயாலிசிஸ் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AIIMS
வயிற்று வலிக்கு வந்த பெண்ணை டயாலிசிஸ் அறுவை சிகிச்சை செய்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள்
Published on

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரேகா தேவி (வயது 30) இவர் கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவர் சொந்த ஊரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அதனால் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூத்த டாக்டர்கள் குழு வயிற்று வலிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக டயாலிசிஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

சிகிச்சைக்கு பிறகு வயிற்று வலி குணாமாகவில்லை. மீண்டும் இது தொடர்பாக பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணிற்கு சிறுநீரககோளாறு ஏதும் இல்லை என்பதும், தவறுதலாக டயாலிஸ் சிகிச்சை அளித்தும் தெரியவந்தது. தவறான சிகிச்சை அளித்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை டீன் ஓய்.கே. குப்தா உத்தரவிட்டார்.

விசாரணையில் முன்னதாக பீகாரில் ஷாகாஸ்ரா ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறிவிட்டதே தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படுகிறது.

தவறான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்களிலும் முறைகேடுகள் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட பெண் கடந்த 7-ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு இது ஒரு தவறான அறுவை சிகிச்சை நடந்துள்ளது பின்னர் தான் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் டி.கே.சர்மா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com