

புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனால், வாகன போக்குவரத்து முடங்கியது. காற்று மாசுபாடும் குறைந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதனால், மீண்டும் நகரெங்கும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடானது திருப்தி (65) என்ற பிரிவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்று தர குறியீடு ஆனது 0-50 வரை நல்லது என்ற பிரிவிலும், 51-100 திருப்தி என்ற பிரிவிலும் உள்ளது.