டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி.,க்கு திரிணாமுல் ஆதரவு- மம்தாவுக்கு கெஜ்ரிவால் நன்றி

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி.,க்கு திரிணாமுல் ஆதரவு- மம்தாவுக்கு கெஜ்ரிவால் நன்றி
Published on

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி.,க்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அதை தொடர்ந்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ., ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.

இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி.,க்கு சமஜ்வாதி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அதை தொடர்ந்து சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷிற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து கெஜ்ரிவால் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி.,க்கு ஆதரவு அளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு நன்றி. நீங்கள் நல்ல நேரத்திலும், சிக்கலான நேரத்திலும் எப்போதும் ஆதரவாகவும், ஆசியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளீர்கள் நன்றி. இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com