போலி பலாத்கார நாடகம் சுவாதி மாலிவாலை நீக்க வேண்டும் பா.ஜ.க கோரிக்கை

கார் ஓட்டுனர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெல்லி மகளிர் நல ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் நாடகமாடியது அம்பலமாகிவிட்டதாக பாஜக சாடியுள்ளது.
போலி பலாத்கார நாடகம் சுவாதி மாலிவாலை நீக்க வேண்டும் பா.ஜ.க கோரிக்கை
Published on

புதுடெல்லி

டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருந்து வருபவர் சுவாதி மாலிவால். அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது நுழைவு வாயிலில் குடிபோதையில் கார் ஓட்டுனர் ஏய்ம்ஸ் மருத்துவமனை அருகில் தன்னை பலவந்தப்படுத்த முயன்றதாகவும் தாம் போராடியதால் காருடன் சேர்த்து தன்னை இழுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இது நாடகம் என பாஜகவின் சாஜியா இல்மி சாடியுள்ளார். கைது செய்யப்பட்ட 47 வயதான நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்றும் டெல்லி போலீசாரை குறைகூறுவதற்காக நடத்தப்பட்ட போலி பலாத்கார நாடகம் என்றும் சாஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

சுவாதியை வைத்து ஆம் ஆத்மி கட்சி மலிவான அரசியல் நடத்துவதாகவும் பெண்கள் பாதுகாப்பு என்ற தீவிரமான பிரச்சினையை பொய்யாகப் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் சுவாதி மாலிவாலை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு டெல்லி பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.டெல்லி பாஜக சனிக்கிழமை கவர்னர் வினய் குமார் சக்சேனாவுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com