கொடூரத்தின் உச்சம்...! 16 வயது சிறுமி 40 முறை கத்தியால் குத்திக் கொலை காதலன் வெறிச்செயல்...!

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடூரத்தின் உச்சம்...! 16 வயது சிறுமி 40 முறை கத்தியால் குத்திக் கொலை காதலன் வெறிச்செயல்...!
Published on

புதுடெல்லி:

டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த படுகொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது சாஹல் என்ற 20 வயது மதிக்க தக்க காதலன், சரமாரியாக கத்தியால் 40 முதல் - 50 முறை குத்தி உள்ளார்.

இருந்தும் கோபம் தணியாமல் அருகில் கிடந்த பெரிய எடுத்து மீது பலமுறை போட்டு சிறுமியின் தலையை நொறுக்கி உள்ளார். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். அந்த வழியாகச் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை. அந்த வாலியரை நெருங்குவதற்கு பயந்துள்ளனர்.

இதுபற்றி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

"நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர், ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது" என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாஹல் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டார்.கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சிகரமான கொலைக்கு கண்டனம் தெர்வித்து உள்ளார். "டெல்லியில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். இது மிகவும் வருத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகிவிட்டனர், காவல்துறைக்கு பயம் இல்லை. எல்ஜி சார், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com