

புதுடெல்லி,
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா போர்வீரர்களை நான் வணங்குகிறேன். டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள், அனைத்து சமூக மற்றும் மத அமைப்புகள், நீங்கள் அனைவரும் நோய்த்தொற்றுகளின்போது முன்னின்று மக்களுக்கு சேவை செய்தீர்கள்.
இந்த புதிய ஆண்டு புதிய நம்பிக்கையுடன் வந்துள்ளது, எனவே மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள். உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.