நாளை குஜராத் செல்கிறார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
நாளை குஜராத் செல்கிறார் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

டெல்லி, 

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 4 வது முறையாக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அவர் நாளை குஜராத்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி தலைமை கூறியதாவது,

வரவிருக்கும் மக்களவைத் தேதலைக் கருத்தில் கொண்டு தில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை புறப்படுவார். இந்த பயணத்தின்போது அவர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவா. கட்சித் தொண்டாகளை சந்தித்து அவர் கலந்துரையாடுவா. பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவா சைதா வாசவாவை அவா சந்திப்பா. இவ்வாறு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com