தீபாவளி எதிரொலி; டெல்லியில் காற்று மாசு 344 ஆகப் பதிவு

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் வட இந்தியாவில் காற்றுத் தரம் மிகவும் மோசமடைவது வழக்கம் தான்.
தீபாவளி எதிரொலி; டெல்லியில்  காற்று மாசு 344 ஆகப் பதிவு
Published on: 

புதுடெல்லி,

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பட்டாசு வெடிப்பு மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு (AQI - Air Quality Index) குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியின் காற்றின் தரம் மிக மோசமாக மாறி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் வட இந்தியாவில் காற்றுத் தரம் மிகவும் மோசமடைவது வழக்கம். அந்தவகையில், டெல்லியில் பனிக்காலக் குளிர்காற்று மற்றும் விவசாயக் கழிவுகள் எரிப்புடன் தீபாவளி பட்டாசுப் புகையும் சேர்ந்துகொண்டதால், காற்றின் தரம் 380 முதல் 444 வரை உயர்ந்து 'மிக மோசம்' மற்றும் 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது

பல இடங்களில் வானம் முழுவதும் நச்சுப் புகைப் படலமாக மாறியுள்ளதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் அதிகரித்துள்ளன.

டெல்லி மற்​றும் தேசிய தலைநகர் பகுதி​களில் தீபாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு, இரண்டு நாட்களுக்கு பசுமைப் பட்​டாசுகளை வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி​யது குறிப்பிடத்தக்கது.

X