டெல்லி முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரி சந்திப்பு; வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை


டெல்லி முதல்-மந்திரி மற்றும் மத்திய மந்திரி சந்திப்பு; வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 3 March 2025 11:28 PM IST (Updated: 4 March 2025 5:43 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி அன்னபூர்ணா தேவி ஆகியோர் சாஸ்திரி பவனில் இன்று நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் இருவரும் டெல்லி வளர்ச்சிக்கான பணிகள் பற்றி ஆலோசித்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவி, டெல்லி மக்கள் பா.ஜ.க. மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். டெல்லியில் தற்போது இரட்டை என்ஜின் அரசு உள்ளது. இதில் மகிழ்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால், நமக்கு ஒரு பெண் முதல்-மந்திரி கிடைத்திருக்கிறார்.

இந்த இரட்டை என்ஜின் அரசு வளர்ச்சிக்காக பணியாற்றும். டெல்லி மக்கள் காட்டிய நம்பிக்கைக்கு ஏற்ப அரசு செயல்படும் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, இதற்கு முன்பு ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தவில்லை. அவை இனி அமல்படுத்தப்படும். நாங்கள் பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம் என கூறியுள்ளார்.

அதற்கு முன்னர், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா இன்று பேசும்போது, வருகிற 24 மற்றும் 26 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், டெல்லி வளர்ச்சிக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஆலோசனைகளை அரசு கேட்க இருக்கிறது. டெல்லியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்று கூறினார்.

1 More update

Next Story