

இதற்காக கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் முன்தினம் நடந்தது. இதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியின் மூத்த தலைவர்களான பங்கஜ் குப்தா, என்.டி.குப்தா ஆகியோர் முறையே கட்சியின் செயலாளர் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களை தவிர கெஜ்ரிவால் உள்பட 34 பேர் அடங்கிய புதிய செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.