டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர் மீது 3ம் ஆண்டு மாணவி பாலியல் புகார்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் மாணவர் மீது 3ம் ஆண்டு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார்.
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர் மீது 3ம் ஆண்டு மாணவி பாலியல் புகார்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் வசந்த்குஞ்ச் காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மாணவிக்கு நன்கு தெரிந்த, அவருடன் படித்து வரும் சக மாணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இதுபற்றி பிரிவு 354ஏ மற்றும் 509 ஆகிய இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை டெல்லி போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் (ஏ.ஐ.எஸ்.ஏ.) உறுப்பினர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் பல விசயங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஏப்ரலில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடந்த மதம் சார்ந்த நிகழ்ச்சியை முன்னிட்டு இரு மாணவர் குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர், கம்பு, கட்டைகளால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் மாணவ, மாணவிகள் உள்பட 60 பேர் வரை காயமடைந்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com