கோர்ட்டில் கொரோனா நோயாளி ஆஜர்: தனிமையில் 2 நீதிபதிகள்

கோர்ட்டில் கொரோனா நோயாளி ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டதால், நீதிபதிகள் இருவர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கோர்ட்டில் கொரோனா நோயாளி ஆஜர்: தனிமையில் 2 நீதிபதிகள்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் திஸ் ஹசாரி மாவட்ட கோர்ட்டில் ஒரு மாஜிஸ்திரேட்டு முன்பு கடந்த 6-ந் தேதி ஒருவர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கிடையே, அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாஜிஸ்திரேட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருடைய மனைவி, சாகேத் மாவட்ட கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார். அவரும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கிடையே, திஸ் ஹசாரி கோர்ட்டில் அவசர பணியில் ஈடுபடுவோரைத் தவிர, மற்ற ஊழியர்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com