கூகுள் நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்-டெல்லி கோர்ட் உத்தரவு

கூகுள் நிறுவனம் ஹிண்ட்வேர் நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீட வழங்க வேண்டும் என்றும், 8 வாரங்களுக்குள் இப்பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்
கூகுள்
Published on

பிரபல சானிடரிவேர் நிறுவனமான 'ஹிண்ட்வேர்' தனது வர்த்தக முத்திரையை, கூகுள் நிறுவனம் தனது 'ஆட்வேர்ட்ஸ்' விளம்ப ரத் திட்டத்திற்காகப் பயன்படுத்தியதாக டெல்லி ஐகோர்ட்டில் 2 வழக்குகளைத் தொடர்ந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்ணா, உரிய அனுமதியின்றி போட்டி நிறுவனங்களின் விளம்பரங்களுக்காக ஹிண்ட்வேர் பெயரைக் கூகுள் பயன்படுத்தியது 'அநியாயமான நடைமுறை' என்றும், வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் அது விதிமீறல் என்றும் தீர்ப்பளித்தார்

மேலும், கூகுள் நிறுவனம் ஹிண்ட்வேர் நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீட வழங்க வேண்டும் என்றும், 8 வாரங்களுக்குள் இப்பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன், 'ஹிண்ட்வேர்' என்ற பெயரை விளம்பர வார்த்தைக ளாகப் பயன்படுத்த கூகுள் நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com