

அதற்கு அவர் பதில் அளிக்கையில், அமைதியான போராட்டங்கள், வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் அடையாளமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இதையே இந்திய சுப்ரீம் கோர்ட்டும் கூறி உள்ளது. விவசாயிகள் தொடர் போராட்டத்தில் தொடர்புடைய தரப்பினர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே அமெரிக்கா ஊக்குவிக்கிறது என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று பதில் அளித்து கூறியதாவது:-
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். எந்தவொரு பேராட்டத்தையும் இந்திய ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியல் பின்னணியில்தான் முழுமையாக பார்க்க வேண்டும். அரசும், விவசாய அமைப்புகளும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி செங்கோட்டையில் ஜனவரி 26-ந் தேதி நடந்த வன்முறை சம்பவங்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனவரி 6-ந்தேதி நடந்த சம்பவங்களைப்போலவே உணர்வுகளையும், எதிர்வினைகளையும் தூண்டி விட்டுள்ளன. நமது உள்நாட்டு சட்டங்களின்படியே அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.