பயணிகளின் கொரோனா சான்றிதழை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி அரசு வழக்குப்பதிவு

மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த பயணிகளின் கொரோனா சான்றிதழை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
பயணிகளின் கொரோனா சான்றிதழை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி அரசு வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் உச்சமடைந்துள்ளதால் அங்கு வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மராட்டிய மாநிலத்தில் இருந்து டெல்லி வருபவர்கள், கொரோனா இல்லை என்பதற்கான, 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்று டெல்லி அரசு கடந்த வாரம் அறிவித்தது.

இந்நிலையில், மராட்டியத்தில் இருந்து டெல்லி வந்த பயணிகளின் கொரோனா சான்றிதழை சரிபார்க்காத 4 விமான நிறுவனங்கள் மீது டெல்லி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த விமான நிறுவனங்கள் மீது பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தங்களிடம் உள்ள படுக்கைகள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ செயலியில் பொய்யான தகவலை வெளியிட்ட 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. ஆஸ்பத்திரிகள் தவறான தகவலை வெளியிட்டாலோ, படுக்கைகள் இருப்பதாக அரசு செயலியில் தகவல் வௌயிட்டுவிட்டு கொரோனா நோயாளிகளை திருப்பி அனுப்பினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com