டெல்லி: யமுனையில் எங்கு பார்த்தாலும் நுரை - ஆற்றில் இறங்கி 'சத் பூஜையை' கொண்டாட தயாரான மக்கள் அதிர்ச்சி!

டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நச்சு நுரை படிந்து காணப்படுகிறது.
டெல்லி: யமுனையில் எங்கு பார்த்தாலும் நுரை - ஆற்றில் இறங்கி 'சத் பூஜையை' கொண்டாட தயாரான மக்கள் அதிர்ச்சி!
Published on

புதுடெல்லி,

'சத் பூஜை' எனப்படும் பூஜை பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த 'பூர்வாஞ்சலிகள்' மத்தியில் இந்த திருவிழா மிகவும் பிரபலமானது. அவர்கள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை நோக்கி பூஜை செய்வார்கள்.

இந்த ஆண்டு, டெல்லி துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா, யமுனை நதிக்கரையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 'சத் பூஜை' எனப்படும் பூஜையை நடத்த ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள யமுனை நதியில் நச்சு நுரை படிந்து காணப்படுகிறது.

இம்மாத கடைசியில் நடைபெறவுள்ள சத் பூஜை நாளை தொடங்கவுள்ளதை ஒட்டி, அக்டோபர் 25 முதல் பூஜை நாள் வரை யமுனை நதியில் நச்சு நுரை படியாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதிப்பொருட்கள் தெளிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஆற்று நீரில் நுரை மிதப்பதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com