டெல்லியில் மேலும் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

டெல்லியில் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியில் இன்றைய கொரனா பாதிப்பு குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 13,097 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 729 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 738 ஆக இருந்த நிலையில் இன்று 729 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,19,495 ஆக அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் 2,696 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,301 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com