டெல்லியில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது

டெல்லியில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது
Published on

புதுடெல்லி,

வடக்கு டெல்லியில் உள்ள பரா ஹிந்து காவல் நிலையத்தில் டெல்லியைச் சேர்ந்த ரைமா யாஹியா (வயது 29), தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்துள்ளதாக புகார் அளித்தார். தனது புகாரில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதிர் ஷமீமைத் திருமணம் செய்துகொண்டேன்.

கடந்த ஜூன் மாதம் அவர் வாட்ஸ் அப் மூலம் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துள்ளார். இது சட்டவிரோதம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து ஷமீம் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். முத்தலாக் தடைச்சட்ட மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து கடந்த வாரம் தான் சட்டம் அமலுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com