டெல்லி மெட்ரோ: ‘பிங்க்’ தடத்திலும் டிரைவர் இல்லா ரெயில் போக்குவரத்து தொடக்கம்..!

டெல்லி மெட்ரோவின் ‘பிங்க்’ தடத்திலும் டிரைவர் இல்லா ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் முதல் முறையாக டிரைவர் இல்லா ரெயில் போக்குவரத்தை டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்து கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார். டெல்லி மெட்ரோவின் மெஜந்தா தடத்தில் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக டெல்லி மெட்ரோவின் பிங்க் தடத்திலும் (மஜலிஸ் பூங்கா-ஷிவ் விகார்) நேற்று டிரைவர் இல்லா ரெயில் போக்குவரத்து தொடங்கியது. மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி மற்றும் மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் ஆகியோர் இதை தொடங்கி வைத்தனர். இதன் மூலம் டெல்லி மெட்ரோவில் டிரைவர் இல்லா ரெயில் போக்குவரத்து நடைபெறும் தொலைவின் நீளம் சுமார் 97 கி.மீ. ஆக அதிகரித்து உள்ளது.

இது உலக அளவில் 4-வது மிகப்பெரிய தடமாக மாறியுள்ளது. அந்தவகையில் சிங்கப்பூர், ஷாங்காய், கோலாலம்பூர் ஆகிய நகரங்கள் முதல் 3 இடங்களை பிடித்து உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com