டெல்லி மெட்ரோ: 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பயணிகள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் பயணிகள் காத்திருக்கும் அவலநிலை காணப்படுகிறது.
டெல்லி மெட்ரோ: 1 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பயணிகள்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவை தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் மாலை நேரத்தில் நீண்ட வரிசையில் ரெயில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதுபற்றி பயணி ஒருவர் கூறும்போது, 1 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்கிறேன். ரெயில் நிலையத்திற்குள் நுழையவே இதுபோன்று காத்திருக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் எப்படி பயணம் செய்து வீடு சென்றடைய முடியும்? கோடை காலங்களில் மிக கடினமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com