இந்திய- பாகிஸ்தான் போர் வெற்றி தினம்: அமர் ஜவானில் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் அஞ்சலி

இந்திய- பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு அமர் ஜவானில் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய- பாகிஸ்தான் போர் வெற்றி தினம்: அமர் ஜவானில் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் அஞ்சலி
Published on

புதுடெல்லி,

1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் ராணுவம் தானாக முன்வந்து இந்தியாவிடம் சரணடைந்தது. இதையடுத்து கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி இந்தியவாயிலில் (இந்தியா கேட்) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை மந்திரி அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய ராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.

அந்த வகையில் இந்திய-பாகிஸ்தான் போரின் 46-வது வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் அனிசரிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா அமர் ஜவான் ஜோதியில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின்போது ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோவா, கடற்படை தளபதி சுனில் லன்பா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com