

புதுடெல்லி,
நாட்டின் கொரோனா 2வது அலையின் தீவிரம் பல பகுதிகளில் குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளன. இதன்படி, டெல்லியில் வருகிற செப்டம்பர் 1ந்தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி, 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, டெல்லியில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவசரகால பயன்பாட்டிற்காக தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.