டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நடிகரும், பாடகருமான தீப்சித்து, குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது வன்முறை வெடித்தது. விவசாயிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பலர் செங்கோட்டைக்குள் நுழைந்து, அதன் மாடங்களில் மதக் கொடிகளையும், பிற கொடிகளையும் ஏற்றினர். அன்று பிரதமர் தேசிய கொடியேற்ற இருந்த நேரத்தில் இந்த சம்பவங்கள் நடந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வன்முறை சம்பவத்தில் நடிகர் தீப்சித்து உள்பட சிலர் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. போலீசார் அனுமதிக்காத பாதையில் போராட்ட காரர்கள் பயணிக்க அவர் தூண்டுகோலாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தீப்சித்து பற்றி தகவல் சொன்னால் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. அதுபோல பூடாசிங், சுக்தேவ் சிங் மற்றும் 2 பேருக்கு தலா 50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. மேலும் அவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com