மாணவர்கள் பேரணியில் பத்திரிகை பெண் போட்டா கிராபரிடம் தவறாக நடந்த போலீசார் -அதிகாரி விளக்கம்

ஜவர்ஹர்லால் பல்கலைகழக மாணவர்கள் பேரணியில் பத்திரிகை பெண் போட்டா கிராபரிடம் போலீசார் தவறாக நடந்து கொண்டனர்.
மாணவர்கள் பேரணியில் பத்திரிகை பெண் போட்டா கிராபரிடம் தவறாக நடந்த போலீசார் -அதிகாரி விளக்கம்
Published on

புதுடெல்லி

எட்டு மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதற்காக பேராசிரியர் அதுல் ஜோரியை சஸ்பெண்ட் செய்யக்கோரி ஜவர்ஹர்லால பல்கலைகழக ஆசிரியர்கள் சங்க மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர்.

ஆனால் குறிப்பிட்ட இடத்தில் பேரணியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் திடீர் என பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்தும், சிலர் மீது தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர்.

தடியடி நடத்தியபோது தவறுதலாக பெண் நிருபர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

டெல்லி கனட் போலீஸ் நிலைய அதிகாரிக்கு எதிராக பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் போலீசார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

அவர்கள் என் கேமராவை எடுத்துவிட்டு அதை திரும்பப் கொடுக்கவில்லை. நான் அவர்களிடம் நான் பத்திரிகையாளர் என கூறினேன். ஆனால் அவர்கள் என்னை வெளியே இழுத்துக்கொண்டு சென்றனர்.

இது குறித்து டெல்லியைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி கூறியதாவது:-

போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தண்ணீரை பாய்ச்சி அடித்தனர். அப்போது ஒரு பெண் நிருபர் இருப்பதை அறியாமல் பெண் போலீசார்கள் அவரையும் தாக்கியுள்ளனர். இது தவறுதலாக நடந்த செயலாகும். எனினும் இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com