திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மாவை அவமதிக்கும் வகையில் 'எக்ஸ்' தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அடுத்த 3 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை போலீசார் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் புதிய குற்றவியல் சட்டம் பிரிவு 79-ன் கீழ் மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக தேசிய மகளிர் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மஹுவா மொய்த்ரா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "டெல்லி போலீசார் என்னை 3 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றால், நான் நடியா பகுதியில்தான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா வெளியிட்ட சில சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிர்ந்து, "என் மீது நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில், மற்றொரு தொடர் குற்றவாளிக்கு எதிராகவும் உங்கள் புதிய சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யுங்கள்" என்று மஹுவா மொய்த்ரா பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com