டெல்லி: பி.எப்.ஐ. அமைப்பினர் மீது 'உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

டெல்லியில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் பி.எப்.ஐ. அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: பி.எப்.ஐ. அமைப்பினர் மீது 'உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயங்களுக்கு ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

இதையடுத்து, நாடு முழுவதும் அந்த அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து, பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பிஎப்ஐ அமைப்பினர் மீது நாடு முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் பி.எப்.ஐ. அமைப்பினர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்குள்ள ஷாகீன்பாக் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்த பிறகும் சில தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com