முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
Published on

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் நினைவு நாளையொட்டி அவரை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வாஜ்பாய் ஆற்றிய சேவையை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தனது 93 வயதில் காலமானார். அவரது 2-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com