

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4,009- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்தார். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,986- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு விகிதம் 6.46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 63,477- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து 1509- பேர் குணம் அடைந்துள்ளனர். ஒமைக்ரான் பரவல் காரணமாகவே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.