டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுடெல்லி,

டெல்லியில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,66,648 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,066 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,325 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,22,491 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 35,091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com