பிரபல பெண் பேஷன் டிசைனர் உதவியாளருடன் கொலை 3 பேர் கைது

டெல்லியில் பேஷன் டிசைனரும் அவரின் உதவியாளரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல பெண் பேஷன் டிசைனர் உதவியாளருடன் கொலை 3 பேர் கைது
Published on

புதுடெல்லி

தெற்கு டெல்லியின் வசந்த் கஞ்சில் ஒரு வீட்டில் ஆடை வடிவமைப்பாளரான மாலா லக்கானி ( வயது 53) என்கிற பெண்ணும் அவருடைய உதவியாளர் பகதூர் (வயது 50) என்பவரும் கொலை செய்யபட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாலா லக்கானியின் தையற்கடையில் பணிபுரிந்த ராகுல் அன்வர், அவரது உறவினர் இருவர் என 3 பேரைக் கைது செய்துள்ளனர். மாலா லக்கானியின் வீட்டில் கொள்ளையடிக்க வந்தபோது இருவரையும் கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com