நாளை 80-வது சுதந்திர தின விழா: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டு, 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

நாளை 80-வது சுதந்திர தின விழா
Published on

புதுடெல்லி,

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகிறார்.

விழாவில் இந்த ஆண்டு, 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். 'இளைஞர் சக்தி' மற்றும் 'வளர்ந்த இந்தியா 2047' ஆகிய கருப்பொருட்கள் முக்கிய மையமாக கொண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

வந்தே மாதரம் பாடல்

விழாவில் 5 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். வரலாற்றில் முதல்முறையாக, செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடப்படவுள்ளது. நிகழ்ச்சியில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள், டெல்லி காவல்துறை அணிவகுப்பு நடைபெறும். தேசிய கொடி. ஏற்றப்பட்ட பிறகு, அதற்கு மரியாதையுடன் "தேசியவணக்கம்" செலுத்தப்படும்.

பின்னர்,ராணுவ இசைக்குழு "வந்தே மாதரம்" பாடலை இசைக்கும். பின்னர் அனைவரும் தேசிய கீதம் பாடுவார்கள். பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றியவுடன் இந்திய விமானப்படையின் 2 ஹெலி காப்டர்கள் வானில் பறந்து மலர் தூவும். ஒரு ஹெலி காப்டர் தேசியக் கொடியை ஏந்தியபடி பறக்கும்.

மற்றொன்று "வந்தே மாதரம்" என்று பொறிக்கப் பட்ட கொடியை ஏந்தியபடி பறக்கும். பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் டெல்லியில் பல முக்கிய இடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரோந்துப் பணிகள், வாகனச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. டிரோன் கண்காணிப்பு மற்றும் ஒத்திகைப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நகர எல்லைகள், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பொது இடங்கள் மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நகர எல்லையில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டு, டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன.

கிழக்கு டெல்லி போலீசார், பதற்றமான மற்றும் கூட்டம் நிறைந்த பகுதிகளில் சோதனைகளை நடத்தி வருகின்ற னர். பதற்றமான பகுதிகளைக் கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சந்தைகள், வணிக வளா கங்கள் மற்றும் பிற பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

வஜ்ரா, வருண் வாகனங்கள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் உள்ளிட்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு, சோதனைகளை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பார்சல்களை முன்பதிவு செய்தல், ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com