காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று

காங்கிரஸ் முத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 2.50- லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் ஆனந்த் சர்மா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com