வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

வரதட்சணை கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் 2024-ம் ஆண்டு 11-வது இடத்தில் சென்னை உள்ளது.
வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
Published on

புதுடெல்லி,

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. 2024-ம் ஆண்டு டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். இந்த பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு டெல்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பட்டியலில் கான்பூர் 2-வது இடத்தில் உள்ளது. கான்பூரில் 54 பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 3-வது இடத்தில் பாட்னா இருக்கிறது. பாட்னாவில் 30 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர். காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 11-வது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com