

புதுடெல்லி,
டெல்லியில் போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி ஜெகதீசன் கண்ணன் நியமிக்கப்பட்டார்.
இவர் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். ஜெகதீசன் கண்ணன் இதற்கு முன்பு டெல்லி போலீஸ் பயிற்சி கல்லூரி இணை கமிஷனராக இருந்தது குறிப்பிடத்தக்கது.