டெல்லி வன்முறைக்கு 1,284 பேர் கைது

டெல்லி நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, இதுவரை 1,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி வன்முறைக்கு 1,284 பேர் கைது
Published on

புதுடெல்லி,

கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியில் நேற்று முன்தினம் இரவு, மின்னல் வேகத்தில் வதந்தி பரவியது. வன்முறை வெடித்துள்ளதாக, டெல்லி மேற்கு மாவட்டம் கயாலா பகுதியில் வதந்தி உருவாகி, நகர் முழுவதும் பரவியது. இதனால், பொதுமக்களிடையே பீதி நிலவியது. இருப்பினும், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர். இதனால் வதந்தி அடங்கியது. இதற்கிடையே, இந்த வதந்தி பரவலுக்கு காரணமான 21 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

தெற்கு டெல்லியில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். தற்போது நிலைமை அமைதியாக இருந்தாலும், ஒருவித அச்சம் நிலவுவதாக போலீசார் கூறினர். இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,284 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com