

புதுடெல்லி,
டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட 5 மூத்த தலைவர்களை கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லிக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சக்திசிங் கோகில், அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் எம்.பி. தாரிக் அன்வர், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கலவர பகுதிகளை பார்வையிட்டு, சூழ்நிலையையும், விளைவுகளையும் ஆய்வு செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கையை சோனியா காந்தியிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறு அந்த குழுவினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.