

புதுடெல்லி,
டெல்லி மாநிலத்தின் மகளிர் ஆணைய தலைவியாக இருந்து வருபவர் சுவாதி மாலிவால். ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவராக இருந்த இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த பதவி வகித்து வருகிறார். 2018ல் இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டு தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது கணவரிடம் இருந்து தனக்கு விவகாரத்து கிடைத்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
சில நேரங்களில் சிறந்தவர்கள் ஒன்றாக இருக்க முடியாது. இது போன்ற வலியை சமாளிக்க எங்களுக்கும் எங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் பலம் அளிக்கும்படி தினமும் கடவுளை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.