டெல்லியில் ராம்லீலா பண்டிகையில் 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி' உருவ பொம்மையை எரிக்க முடிவு

ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக் குறியீடாக கரப்பான்பூச்சி மாறியுள்ளது.
‘கரப்பான்பூச்சி' உருவ பொம்மையை எரிக்க முடிவு
Published on: 

டெல்லி,

டெல்லியில் ராம்லீலா பண்டிகையில் 30 அடி உயர ‘கரப்பான்பூச்சி' உருவ பொம்மையை எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தசரா பண்டிகையின்போது டெல்லியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த உருவபொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை, வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வை நடத்தும் ‘ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி' எடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமாருக்கு எதிராக படித்த இளைஞர்கள் தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதனால், ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக் குறியீடாக கரப்பான்பூச்சி மாறியுள்ளது. பொதுமக்களிடையே தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அசுரப்படையில் ஒரு கரப்பான் பூச்சியைச் சேர்த்து எரிப்பதாக விழா கமிட்டி தலைவரும், பா.ஜனதா எம்.எல்.ஏ-வுமான அசோக் கோயல் தெரிவித்துள்ளார். ஆனால், டெல்லியில் தற்போது அரசுக்கு எதிராகப் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பைக் கிண்டல் செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com