மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு

மராட்டிய மாநிலத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு
Published on

மும்பை,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகைகளில் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. இதில் டெல்டா வகை கொரோனா மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரசாக உள்ளது. இந்த வைரஸ் கொரோனாவின் 3-வது அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டெல்டா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் டெல்டா வைரஸ் பரவி உள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்திலும் டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தில் மேலும் 27 பேருக்கு புதிதாக டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது. இதனால், மராட்டியத்தில் டெல்டா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com