அவசர நிலையின் இருண்ட காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேலும் அந்த நாட்களில் நாடு அனுபவித்த துயரங்களை பிரதமர் மோடியும் நினைவு கூர்ந்திருந்தார்.
அவசர நிலையின் இருண்ட காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 1975 ஜூன் 25-ந்தேதி அவசர நிலை (எமர்ஜென்சி) பிறப்பிக்கப்பட்டது. அதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத் தில், 'அரசியலமைப்பு மதிப்பீடுகள் கடுமையாகச் சோதிக்கப்பட்ட ஒரு காலத்தின் ஆழ்ந்த நினைவூட்டலாக நெருக்கடி நிலை விளங்குகிறது. குடிமை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டன, கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத் தப்பட்டது, மேலும் நமது ஜனநாயகக் கட்டமைப்புக்கு மையமான நிறுவ னங்கள் சீர்குலைக்கப்பட்டன' என சாடியிருந்தார்.

மேலும் அந்த நாட்களில் நாடு அனுபவித்த துயரங்களை பிரதமர் மோடியும் நினைவு கூர்ந்திருந்தார். குறிப்பாக அந்த இருண்ட காலத்தில் நாட்டின் ஜனநாயகம் நசுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'அவசர நிலை என்பது நமது அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் ஆகும். அது குடிமை உரிமைகள் இடைநிறுத்தப்படுவதையும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப் பாடுகளையும், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர் களின் கைதுகளையும், நமது ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் நிறுவனங்களின் மீதான தாக்குதலையும் கண்டது' என குறிப்பிட்டு இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com