

புதுடெல்லி,
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து, மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.
இதையொட்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது. அது வருமாறு:-
* கடனுக்கான வட்டிவீதம் ஒரு சதவீதம் வரை குறைவு
* கடன் மலிவாகி உள்ளது.
* ரியல் எஸ்டேட் துறையில் மனை, வீடுகள் விலை குறைவு
* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாய் 3 மடங்கு அதிகரிப்பு
* டிஜிட்டல் என்னும் ரொக்கமில்லா பண பரிமாற்றத்தால் கடன் அட்டைகள் பயன்பாடு 50 சதவீதம் உயர்வு
* ரொக்கமில்லா பண பரிமாற்றம், 48 சதவீதம் பெருக்கம்.