

ஸ்ரீநகர்,
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், இந்த ஆண்டு இதுவரை 22 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
22 பேரில் 17 பேர் ஜம்மு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். டெங்கு பரவலை தடுக்க புகை போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.