டெல்லியில் 5,277 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் நடப்பு ஆண்டில் 5,277 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் 5,277 பேருக்கு டெங்கு பாதிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொசுக்களால் பரவ கூடிய இந்த காய்ச்சல் பாதிப்புக்கு முதன்முறையாக கடந்த மாதம் 18ந்தேதி ஒருவர் பலியானார். இதனால், சுகாதார பணிகளை அரசு நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தெற்கு டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் நடப்பு ஆண்டில் 5,277 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் கடந்த வாரத்தில் 2,569 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என பதிவாகி உள்ளது. இதுவரை 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com