உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியா; 368 பேர் பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியாவால் 368 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியா; 368 பேர் பாதிப்பு
Published on

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதுபற்றி டெங்கு மற்றும் மலேரியாவுக்கான மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராகேஷ் குமார் கூறும்போது, இதுவரை மொத்தம் 368 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 65 நோயாளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 68 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com