கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி மறுப்பு: சிறை நிர்வாகத்துக்கு கோர்ட்டு நோட்டீஸ்

திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்திக்க சிறை நிர்வாகம் மறுத்ததாக சஞ்சய் சிங் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
File image
File image
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்திக்க சிறை நிர்வாகம் மறுத்ததாக சஞ்சய் சிங் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று கோர்ட்டில் விசாரணை வந்தது. அப்போது, கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி மறுத்ததாக தொடரப்பட்ட மனு மீது திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com