

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 30-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தேரா சச்சா நடத்திய வன்முறைகள் குறித்து சிறப்பு விசாரணை குழு ஒன்று விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது குர்மித் கைது செய்யப்பட்டதும் வன்முறையை தூண்ட உறுப்பினர்கள் ஆதித்யா இன்சான், ஹனிபிரீத் இன்சான் மற்றும் சுரேந்தர் தியமன் இன்சான், ஆகியோர் ரூ 5 கோடி வரை செலவு செய்து உள்ளனர் என்ற விவரம் தெரிய வந்து உள்ளது.
தேரா நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தொகையை . தேராவின் பஞ்ச்குலா கிளையின் தலைவர் சம்கார் சிங் செலவழிப்பதில் முக்கிய பங்காற்றினார்.மொகாலி மாவட்டத்தில் தோகோலியின் பகுதியை சேர்ந்தவரான சாம்கார், ஆகஸ்ட் 28 ம் தேதி முதல் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். என விசாரணையில் தெரியவந்து உள்ளது.