

பாலக்காடு
குடியரசு தின விழாவையொட்டி ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத், கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் கொடியேற்றுவார் என கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி அதிகாரிகள் மட்டுமே தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என கேரள அரசு சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களே கொடியேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதனை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, திட்டமிட்டபடி மோகன்பகவத் கொடியேற்றுவார் என அறிவித்தது.
இந்நிலையில் அந்த பகுதியில் கடும் பதட்டம் நிலவியது. இந்நிலையில் மாநில அரசின் எதிர்ப்பை மீறி இன்று காலை பாலக்காடு பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.