

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் விழாக்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் திருப்பதியில் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறும் சிறப்பு விழாக்களின் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. விழாக்கள் விவரம் வருமாறு:-
4-ந் பேடி ஆஞ்சநேயசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி. 6-ந் தேதி மாதத்ரய ஏகாதசி, 12-ந் தேதி பெரியாழ்வார் உற்சவம். 15-ந் தேதி மிதுன சங்ரமனம். 20-ந் தேதி சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம். 21-ந் தேதி பெரியாழ்வார் சாதுமோரா. 22 முதல் 24-ந் தேதிவரை ஜேஷ்டாபிஷேகம். 24-ந் தேதி ஏருவாக்க பவுர்ணமி.